என் அழகான கணவர்! திடீரென மாரடைப்பால் உயிரிழந்த பிரபல கிரிக்கெட் வீரர் குறித்து உருகும் மனைவி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
620Shares

அவுஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற கடுமையான முயன்ற பிரட் லீக்கு ஜோன்ஸ் மனைவி நன்றி தெரிவித்துள்ளார்.

டீன் ஜோன்ஸ் ஐபிஎல் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், மும்பையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பிரெட் லீ, ஸ்காட் ஸ்டைரிஸ், பிரையன் லாரா உள்ளிட்டோருடன் டீன் ஜோன்ஸ் அந்த குழுவில் இடம் பெற்று இருந்தார். மற்ற ஐபிஎல் வர்ணனையாளர்களுடன் ஹொட்டல் அறையில் தங்கி இருந்தார் டீன் ஜோன்ஸ். அன்றைய தினம் அவர் உடற்பயிற்சி செய்துள்ளார்.

உடற்பயிற்சி செய்து விட்டு சில மணி நேரம் கழித்து அவர் ஹோட்டல் லாபியில் நடந்து வரும் போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அவர் அருகே இருந்த பிரெட் லீ அவருக்கு சிபிஆர் எனும் முதல் உதவி அளித்து நின்று போன இதயத்தை செயல்பட வைக்க கடும் முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

உயிரிழந்த டீனுக்கு, ஜேன் ஜோன்ஸ் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஜேன் ஜோன்ஸ் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், என் அழகான கணவர், என் வாழ்வின் அன்பு, ஒவ்வொரு கணமும் தன் வாழ்வில் உற்சாகமாக இருந்தார்.

எங்கள் வாழ்வில் அவர் பெரிய இடைவெளியை விட்டுவிட்டு சென்றுள்ளார். அதை நிரப்பவே முடியாது.

டீனை உயிருடன் வைத்திருக்க முழு மூச்சுடன் முயன்ற பிரெட் லீக்கு நன்றி கூறி, அவரது செயலை குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்