சிக்கலில் தென்னாப்பிரிக்க அணி: மொத்தமாக கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்படுமா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

விதிகளை மீறியதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மொத்தமாக தடை விதிக்க ஐசிசி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி விதியின்படி ஒரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாக விவகாரங்களில் அரசு தலையிட்டால் அந்த கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதிக்க முடியும்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டில் இருக்கும் உறுப்பினர்கள் ஊழல் செய்துவிட்டதாக அந்த நாட்டில் புகார் எழுந்தது. இதை விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

சில முக்கியமான நபர்கள் அரசின் விசாரணையில் இருந்து தப்பித்ததை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் கண்டுபிடித்தார்.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்ட் மீது மீண்டும் விசாரணை முன்னெடுக்கும் முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் நதி மதேத்வா எடுத்துள்ளார்.

இது தொடார்பாக் அவர் ஐசிசிக்கும் தகவல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

அணியின் நிர்வாகத்தில் அரசு தலையிட்ட காரணத்தால் விரைவில் அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்