காலியாகும் டோனியின் இடம்: தினேஷ் கார்த்திக் போட்ட அதிரடி திட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

கொல்கத்தா அணித்தலைவர் பதவியை தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்ய காரணம் என்ன என்பது தொடர்பில் பின்னணித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொல்கத்தா அணித்தலைவர் பதவியை நேற்று தினேஷ் கார்த்திக் திடீர் என்று ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து கொல்கத்தா அணியை இயான் மோர்கன் முன்னெடுத்து செல்வார் என அறிவிக்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக் தலைவராக செயல்பட்ட 7 போட்டிகளில் கொல்கத்தா 4 ல் வென்றிருந்தும் கொல்கத்தா அணியின் தலைவர் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளார்.

ஆனால் தினேஷ் கார்த்திக்கின் இந்த திடீர் முடிவுக்கு பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்திய அணியில் இருந்தும் சர்வதேச போட்டிகளில் இருந்தும் டோனி ஓய்வு பெற்றுள்ளார்.

இதனால் டோனியின் கீப்பிங் இடமும், 5வது பேட்டிங் பொசிஷனும் காலியாக உள்ளது. இந்த இடத்தில் யார் இறங்குவார் என்று கேள்வி உள்ளது.

அடுத்த வருடம் டி20 உலகக் கிண்ணம் தொடர் நடக்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் யார் கீப்பராக இருக்க போவது என்று போட்டி நிலவி வருகிறது.

இதனால் ஒரு துடுப்பாட்டவீரராக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

மேலும் டோனியின் இடத்தை நிரப்ப திட்டமிட்ட தினேஷ் கார்த்திக் தற்போது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவே தலைவர் பதவியை துறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்