மாரடைப்பால் அவதிப்பட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தற்போது தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் (61) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தான் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் முன்பை இட தற்போது தான் மிகவும் நலமாக இருப்பதாகவும், விரைவில் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்