என் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி! இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் வெளியிட்ட புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சண்டிமால் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் சண்டிமாலுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும்.

இதையடுத்து தனது அணி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

பிறந்தநாள் கேக்கை சண்டிமால் மீது நண்பர்கள் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பான புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனது அணித் தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி . வழக்கம் போல் என் முகத்தை மறக்கமுடியாததாக மாற்றினீர்கள்.

மேலும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு மிக்க நன்றி .

நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்