நஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்... வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கு: அதிர வைக்கும் முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரில் கோடிகளில் புரளும் வீரர்களுக்கு விரைவில் அதிர்ச்சி செய்தி வர உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த 2020 ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் அதனால் லாபம் பார்க்கவில்லை.

போட்டிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சி குழுமம் மட்டுமே கடந்த ஆண்டை விட ஓரளவு லாபம் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதால் விளம்பர ஒப்பந்தங்கள் செய்த பல நிறுவனங்கள் பின்வாங்கின.

போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் வர மாட்டார்கள் என்பதாலும் பல கோடி விளம்பர வாய்ப்புகளை இழந்தன ஐபிஎல் அணிகள்.

மட்டுமின்றி டிக்கெட் வருவாயில் அணிக்கு பங்கு கிடைக்கும். இந்த வருவாய் 2020 ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கும் கிடைக்கவில்லை.

அதே வேளை, வீரர்களுக்கு முன்பு அவர்களை ஏலத்தில் எடுத்த அதே சம்பளத்தை அளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

2020 ஐபிஎல் தொடரில் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு வீரர்கள் சம்பளத்தை குறைக்க ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மெகா ஏலத்தின் போது ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு ஏலத் தொகையை குறைக்கலாம் என்கிறார்கள்.

இது ஒன்றிரண்டு அணிகள் மட்டும் திட்டமிட்டு செய்ய முடியாது. அனைத்து அணிகளும் குறிப்பிட்ட ஏலத் தொகையை அதிகபட்சமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே முடியும் என கூறப்படுகிறது.

இருப்பினும், 2020 ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு ஐபிஎல் அணிகள் அதிக விளம்பர வருவாய் ஈட்டக் கூடும் என சந்தை நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.

இதனால் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படாமல் தப்ப வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்