இலங்கைக்கு மறுப்பு... கங்குலி எடுத்த முடிவு: மொத்தம் 4000 கோடி அள்ளிய இந்திய கிரிக்கெட் வாரியம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
486Shares

2020 ஐபிஎல் தொடர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வருமானத்தை அள்ளியுள்ளது.

இதன் பின்னணியில் கங்குலியின் பல அதிரடி முடிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 4000 கோடி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாடுகளில் தொடரை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தன. அதில் விமான பயணம் குறைவாக இருக்கும் நாட்டை தெரிவு செய்த கங்குலி,

அண்டை நாடான இலங்கைக்கு மறுப்பு தெரிவித்தார். ஐக்கிய அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களுக்கும் பேருந்திலேயே பயணம் செய்யலாம், மட்டுமின்றி விமான பயணத்தின் செலவை குறைக்கலாம் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

விளம்பர வருவாய் குறைந்த நிலையில், வெளிநாட்டில் நடந்தாலும் கடந்த ஆண்டை விட சிக்கனமாக தொடரை நடத்த வேண்டும் என திட்டமிட்டது பிசிசிஐ. அதன்படி பல சிக்கன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹொட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்தனர்.

இக்கட்டான இந்த காலகட்டத்திலும் எந்த சிக்கலும் இன்றி 2020 ஐபிஎல் தொடர் நடந்து முடிந்ததில், மொத்தம் 4,000 கோடி வரை இந்திய கிரிக்கெட் வாரியம் வருமானம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

அது மட்டும் ஐபிஎல் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரே தடங்கல். ஆனால், மொத்தம் 1800 பேருக்கு 30,000 முறைக்கும் மேல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதில் போட்டிகள் துவங்கிய பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் தொடர் தடையின்றி நடந்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்