அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பின் ஆளே மாறி போன தமிழன் நடராஜன்! வெளியிட்டுள்ள சூப்பரான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
520Shares

தமிழக வீரர் நடராஜன் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பின் அங்கிருந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்திய அணியில் ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார்.

அதன்பின் நடந்த இரண்டு டி 20 போட்டியில் 2 மற்றும் 1 விக்கெட் என்று அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் அவுஸ்திரேலியா சென்ற பின் மொத்தமாக தனது தோற்றத்தை மாற்றி புதுப்பொலிவுடன் காணப்படுகிறார்.

இவரின் தோற்றம் மொத்தமாக மாறி உள்ளது. முன்பு தான் வைத்து இருந்த தாடியை இவர் குழந்தை பிறந்த பின் எடுத்தார். அதன்பின் தலை முடியை வெட்டினார். தற்போது இவர் மிக ஸ்டைலாக மாறியுள்ளார்.

தற்போது இவர் மேலும் பிட்டாகி உள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர்களுக்கு கீழ் பயிற்சி மேற்கொள்வதால் இவர் மேலும் பிட்டாகி உள்ளார். இவரின் உடல் மேலும் மெருகேறி உள்ளது புகைபடம் மூலம் தெரிய வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்