மனைவி மற்றும் அழகிய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
672Shares

கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெப்ரி வண்டர்சே அது தொடர்பிலான அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளவர் ஜெப்ரி வண்டர்சே.

இவர் 10 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.ஜெப்ரி வண்டர்சே முதன் முதலில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக விளையாட தொடங்கினார்.

இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெப்ரி வண்டர்சே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதையடுத்து அந்த புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்