இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
259Shares

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

கிரிக்கெட் உலகின் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சவுரவ் கங்குலி இன்று வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்திரி சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்