கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி செய்து வரும் வியக்க வைக்கும் செயல்! அதனால் கிடைக்கும் பலன்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
454Shares

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி தனது பண்ணை வீட்டில் விளைவித்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் டோனி முழு நேர விவாசாயிகவே மாறியிருக்கிறார்.

தனது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தார்.

அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் அந்த உரம் தரும் விளைச்சலைப் பொறுத்து, அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உர விற்பனையை டோனி தனது தரப்பிலிருந்து தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

மேலும், சமீபத்தில் டிராக்டர் ஒன்றை டோனி ஓட்டிய வீடியோ வெளியானது. அத்துடன் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் டோனி விளக்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது டோனி தனது பண்ணை வீட்டில் பயிரிட்டிருந்த பயிர்கள் விளைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளன. தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை டோனி இயற்கை முறையில் விளைவித்துள்ளார்.

அவர் விளைவித்த இந்தக் காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. தங்களது வேளாண்மைத்துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்