ரஷ்யாவை ஊதி தள்ளிய கனடா! இறுதி போட்டியில் அமெரிக்காவுடன் பலப்பரீட்சை

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
71Shares

கனடாவில் நடைபெற்று வரும் 2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் 5-0 என ரஷ்யாவை ஊதி தள்ளி கனடா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

IIHF-யின் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக U20 சாம்பியன்ஷிப், பொதுவாக IIHF-யின் உலக ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக 18 முறை தங்கம் வென்று, அதாவது 18 முறை உலக ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை கனடா கைப்பற்றியுள்ளது.

கனடாவை தொடர்ந்து ரஷ்யா (13), பின்லாந்து (5), அமெரிக்கா (4), ஸ்வீடன் (2), செக் குடியரசு (2) முறை சாம்பின்ஷிப் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில், 10 அணிகள் பங்கேற்ற 2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் 25ம் தேதி கனடாவில் தொடங்கியது.

இதில், ‘ஏ’ பிரிவில் கனடா, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேக்கியா மற்றும் ஜேர்மனி ஆகிய அணிகள் இடம்பிடித்தன.

‘பி’ பிரிவில் ரஷ்யா, ஸ்வீடன், அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் ஆஸ்திரியா அணிகள் இடம்பிடித்தன.

லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ‘ஏ’ பிரிவில் கனடா, பின்லாந்து மற்றும் ‘பி’ பிரிவில் அமெரிக்கா, ரஷ்யா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

எட்மண்டனில் நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் கனடா-ரஷ்யா மோதின. இதில் 5-0 என ரஷ்யாவை வீழ்த்திய கனடா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2வது அரையிறுதிப்போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை வீழ்த்தி அமெரிக்க இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜனவரி 5ம் தேதி நடக்கும் 3வது இடத்திற்கான போட்டியில் அரையிறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்த ரஷ்யா-பின்லாந்து அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றிப்பெறும் அணி வெண்கலத்தை வெல்லும்.

ஜனவரி 5ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் கனடா-அமெரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப்பெறும் அணி தங்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வெல்லும். தோல்வியடையும் அணிக்கு வெள்ளி வழங்கப்படும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்