விபத்தில் சிக்கிய சானியா மிர்சாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயிப் மாலிக்!

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
316Shares

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சானியா மிர்சாவின் கணவருமான ஷோயிப் மாலிக் விபத்தில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தேசிய உயர் செயல்திறன் மையத்திற்கு வந்த ஷோயிப் மாலிக் பின்னர் அங்கிருந்து காரில் கிளம்பினார்.

அப்போது வேகமாக அவர் காரில் சென்ற போது அவரின் கட்டுப்பாட்டை மீறிய கார் அங்கு நின்றிருந்த டிரக் லொறி மீது மோதியது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் மாலிக்குக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து மாலிக் டுவிட்டரில், நான் நலமுடன் இருக்கிறேன்.

என் மீது அக்கறை கொண்டு விசாரித்தவர்களுக்கு நன்றி.

உங்களின் எல்லா அன்பிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்