இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 10 மாதம் காத்திருந்த இங்கிலாந்து ரசிகருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
57Shares

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை காண 10 மாதங்கள் காத்திருந்த இங்கிலாந்து ரசிகர் அதை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு கொரோனா காரணமாக கடந்த மார்ச் 2020இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் தள்ளிப்போனதால் இப்போது தான் நடைபெறுகிறது. தன் நாட்டின் அணி இலங்கையில் விளையாடுவதை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்த கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் செய்து வந்துள்ளார் ராப் லீவிஸ்.

கொரோனா தொடரை தள்ளிப்போட இங்கிலாந்து அணி இலங்கைக்கு வரும் வரை இலங்கையிலேயே இருக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். நாட்கள் கடந்தன. பத்து மாத காத்திருப்புக்கு பின்னர் இங்கிலாந்து அணி இலங்கைக்கு வந்தது.

ராப் லீவிஸும் முதல் போட்டியை காணும் ஆர்வத்தில் இருந்துள்ளார். இருப்பினும் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை இலங்கை அரசு. அதனால் காலே போட்டியை மைதானத்திற்கு பக்கத்தில் காலே கோட்டையிலிருந்து பார்க்க ராப் முடிவு செய்துள்ளார். அதன்படி கோட்டையின் கோபுரத்தில் ஏறி அவர் போட்டியை பார்க்க ஆயத்தமாகியுள்ளார்.

இரு அணிகளும் தேசிய கீதம் பாடிய நிலையில் ராப் லீவிஸை கோட்டையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் இலங்கை பொலிசார்.

இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு போட்டியை நான் நிச்சயம் பார்ப்பேன் என சொல்லியுள்ளார் ராப். அவரது பத்து மாத காத்திருப்பு போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே கலைந்துள்ளது.

அந்த கோட்டையிலிருந்து பத்திரிகையாளர்கள் போட்டியை பாத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தொடரை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்