இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் மரணம்! கோஹ்லி உருக்கமான பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
120Shares

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியாவின் தந்தை ஹிமன்ஸு பாண்டியா மாரடைப்பால் காலமானார்.

இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி வீரர்களாக இருப்பவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா.

இவர்களின் தந்தை ஹிமன்ஸு பாண்டியா இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியின் டுவிட்டர் பதிவில், ஹர்திக் மற்றும் குருனால் தந்தையின் மரண செய்தியை அறிந்து மனம் உடைந்தது.

அவரிடம் சில முறை பேசியுள்ளேன். மகிழ்ச்சி நிறைந்த நபராக அவர் இருந்தார்.

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும், இரண்டு பிள்ளைகளும் தைரியமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்