தவறான பேச்சு... சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares

இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் வெளியிட்ட வீடியோ ஒன்றால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இந்திய அணியின் மூத்த சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் முக்கியமான காரணமாக இருந்தார்.

கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே மைதானத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து அஸ்வின் வீடியோ வெளியிடுவது உண்டு. இதற்காக அவர் யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தற்போது நடந்து முடிந்த அவுஸ்திரேலிய தொடருக்காக கங்காரு பூமி என்ற பெயரில் இவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினும் இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதரும் இணைந்து இந்த வீடியோவில் பேசி இருந்தனர்.

அஸ்வின் இந்த வீடியோவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு இழிவான வார்த்தையை சொல்லி அவுஸ்திரேலிய வீரர்கள் குறித்து அஸ்வின் பேசி இருந்தார். அஸ்வின் அந்த சொல்லை பயன்படுத்தியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

இதன் காரணமாக தற்போது அஸ்வின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் இருவரையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்