மனைவியை என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி! கொலை செய்ய கூட தயங்கமாட்டார்கள்.. பிரபல கிரிக்கெட் வீரர் பரபரப்பு புகார்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares

தன்னையும் தனது மனைவியையும் சாதியை காரணம் காட்டி பிரிக்க முயற்சி செய்வதாக சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் சுரேந்திரன் சந்திரமோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சுரேந்திரன் சந்திரமோகன், சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். அவரும், ஸ்னேகா என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்னேகாவின் பெற்றோர் சுரேந்திரன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனை தொடர்ந்து இந்த ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த டிசம்பர் 13ம் திகதி தஞ்சாவூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஸ்னேகா தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பினார்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி 18 ம் திகதி ஸ்னேகா தன்னை அழைத்ததாகவும், அவரது பெற்றோருக்கு தங்கள் திருமணம் குறித்து தெரிய வந்ததும் அவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அத்துடன் ஸ்னேகா தொடர்ந்து மறுத்தால் அவரை கவுரவ கொலை செய்ய கூட அவரது பெற்றோர் தயங்க மாட்டார்கள் என்றும் சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து அவர் தனது மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி ஹேபியாஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மதுரை பெஞ்ச் நேற்று பட்டுகோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி 29 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்