மாவட்ட கரப்பந்தாட்டத்தில் ஆவரங்கால் மத்தி சம்பியன்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

அரியாலை திருமகள் சனசமூக நிலையம் தனது 66ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் மத்திய அணி கிண்ணம் வென்றது.

திருமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய அணியை எதிர்த்து நாயன்மார்கட்டு பாரதி அணி மோதியது.

இதில் ஆவரங்கால் மத்திய அணி 25:19, 26:24, 25:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று செற்களையும் கைப்பற்றி 3:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.

பரிசளிப்பு நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட கரப் பந்தாட்டச் சங்க தலைவர் கி.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers