தேசிய ரிதி­ய­லான கராத்தேயில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

தேசிய ரிதி­ய­லான கராத்தே தொட­ரில் விசு­வ­மடு சி.எஸ்.டி கழ­கத்­தின் மாண­வர்­கள் தேசிய மட்­டத்­தில் 3 தங்­கப்­ப­தக்­கங்­கள் 1 வெள்­ளிப் பதக்­கம், 3 வெண்­க­லப் பதக்­கங்­கள் என்று ஒட்­டு­மொத்­த­மாக 7 பதக்­கங்­களை வென்­ற­னர்.

கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் கடந்த வாரம் இந்­தப் போட்­டி­கள் இடம்­பெற்­றன.

விசு­வ­மடு சி.எஸ்.டி கழ­கத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்து விளை­யா­டிய எஸ்.உசாந்­தினி காட்­டாப் போட்­டி­யில் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னர்.

வி.கஜந்தா 21 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான 45 கிலோ எடைப்­பி­ரிவு குமித்­தே­யில் தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், காட்­டாப் போட்­டி­யில் வெண்­க­லத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

வி.சுகந்­தினி 21 வய­துப்­பி­ரி­வுக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான 61 கிலோ எடைப்­பி­ரிவு காட்­டப் போட்­டி­யில் தங்­கப் பதக்­கத்­தை­யும், குமித்தே போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

எல்.அனுஷா 21 வய­துக்கு மேற்­பட்ட 61 கிலோ எடைப்­பி­ரி­வி­ன­ருக்­கான காட்­டப் போட்டி, குமித்தே போட்­டி­யில் வெண்­க­லப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers