ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜொலிஸ்ரார் அணி: இறுதியில் வெற்றியை பதிவு செய்த சென்றலைட்ஸ் அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
17Shares
17Shares
ibctamil.com

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, பழைய பூங்காவிற்கு பின்னாலுள்ள கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இந்தச் சுற்றுப்போட்டியானது நடத்தப்பட்டது.

5 ஆம் திகதி மாலை நடைபெற்ற, ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து ஜொலிஸ்ரார்ஸ் அணி மோதியது.

முதற்காற் பாதியாட்டம் முடியும் போது, ஜொலிஸ்ரார்ஸ் அணி, 18:16 என முன்னிலை வகித்தது.

எனினும், விடாது ஆடிய சென்றலைட்ஸ் அணி, இரண்டாவது காற்பாதியாட்டம் முடியும்போது, 28:24 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது காற்பாதியாட்;டம் முடிவடைகையில், சென்றலைட்ஸ் அணி, 48:46 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

இறுதி கால்ப்பாதியாட்டத்தில் சிறப்பாக ஆடிய சென்றலைட்ஸ் அணி, ஆட்டநேர முடிவில், 70:63 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் பமிலியன்ஸ் அணியை எதிர்த்து யமஹா அணி மோதியது.

முதற்காற்பாதியாட்டம் முடிகையில், பமிலியன்ஸ் அணி, 18:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்து, தொடர்ந்து இரண்டாவது காற்பாதியாட்டம் முடிகையில், 38:26 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது காற்பாதியாட்டத்தில் யமஹா அணி போராட்டத்தை வெளிப்படுத்தியது.

எனினும், அந்தக் கால்ப்பாதியாட்டம் முடிகையிலும், பமிலியன்ஸ் அணி, 52:44 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

நான்காவதும் இறுதியுமான கால்ப்பாதியாட்டம் போராட்டம் மிகுந்ததாக இருந்தபோதும், பமிலியன்ஸ் அணி, ஆட்டநேர முடிவில் 68:59 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்