பஹ்ரைனுக்கு பறக்கும் இலங்கை கரப்பந்தாட்ட அணி: ஏன் தெரியுமா?

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
25Shares
25Shares
ibctamil.com

vபஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய கனிஷ்ட ஆண்கள் (20 வயதுக்குட்பட்ட) கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்ககேற்கவுள்ள இலங்கை கனிஷ்ட அணி, நேற்றுமுன்தினம் பஹ்ரைன் நோக்கி பயணமாகியது.

இம்முறைப் நடைபெறவுள்ள போட்டித் தொடரில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், தென் கொரியா, கட்டார், பஹ்ரைன், ஈராக், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராட்சியம், ஜோர்தான், சீன தாய்ப்பே, கஸகஸ்தான், நியூசிலாந்து, மாலைதீவுகள், மலேசியா, இந்தியா, ஈரான், அவுஸ்திரேலியா, மக்காவோ, ஹொங்கொங், உஸ்பகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 24 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் நுவன் தாரக ஜயலத் செயற்படவுள்ளார்.

இதேநேரம், இலங்கையின் கரப்பந்தாட்டப் போட்டிகளில் முன்னிலை பாடசாலைகளாக விளங்குகின்ற நாத்தான்டிய தம்மிஸ்ஸர கல்லூரியைச் சேர்ந்த நான்கு வீரர்களும், ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியைப் பிரிதிநிதித்துவப்படுத்தி மூன்று வீரர்களும், சீதுவ தவிசமர கல்லூரியைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இலங்கைக்காக விளையாடவுள்ளனர்.

எட்டு குழுக்களாக நடைபெறவுள்ள இம்முறை போட்டிகளில் குழு சி இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, அவுஸ்திரேலியா, கஸகஸ்தான் ஆகிய பிரபல நாடுகளுடன் போட்டியிடவுள்ளது.

இதன்படி, தமது முதல் போட்டியில் கஸகஸ்தான் அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி, 2ஆம் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இவ்விரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பு கிட்டும்.

இந்த நிலையில், இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக லலித் பிரேமலால் செயற்படுகின்ற அதேவேளை, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தேனுக மலிந்த முகாமையாளராக செயற்படவுள்ளார்.

1980ஆம் ஆண்டு முதல் 20 வயதுக்குட்பட்ட ஆசிய ஆண்கள் கனிஷ்ட கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

இதில் இறுதியாக 2016இல் நடைபெற்ற போட்டித் தொடரில் இலங்கை அணி 7ஆவது இடத்தைப் பெற்றக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கனிஷ்ட ஆண்கள் கரப்பந்தாட்ட அணி விபரம்

நுவன் தாரக ஜயலத் – அணித் தலைவர், சயுரு கனிஷ்க பெர்னாண்டோ, (வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி), விதுர பிரபாத் பெரேரா, சங்க டில்ஷான் ஜயரத்ன, ருச்சிர சம்பத் ஜயதுங்க (ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி),

மஹேல இந்தீவர, மலீஷ ரவிஷான் ஜயதிலக (நாத்தான்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலை), பசிந்து சந்தருவன், சுஜித் நிலங்க சில்வா (சீதுவ தவிசமர கல்லூரி), கவீன் திவங்க சில்வா (நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்