இடியுடன் கூடிய கனத்த மழை: சொல்கிறது சூப்பர் "குடை"

Report Print Deepthi Deepthi in ஏனைய தொழிநுட்பம்
இடியுடன் கூடிய கனத்த மழை: சொல்கிறது சூப்பர்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்என வானிலை மையம் தெரிவித்து தான் இதுவரை கேட்டிருப்போம்.

ஆனால், தற்போது மழை வரவிருப்பதைகாட்டிக்கொடுக்கும் குடை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள வெஸ்ஸூ என்ற நிறுவனம்வடிவமைத்துள்துள்ள இந்த குடைக்கு ‘ஊம்ப்ரெல்லா’ என்று பெயர்.

ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, ஊம்ப்ரெல்லாவை இயக்க வேண்டும்.

வானிலை மாற்றங்கள் மட்டுமின்றி, வீட்டிலோ, வெளியிலோ குடையை மறந்து வைத்துவிட்டு வருவதைக்கூடஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் குடை இருக்கும் இடத்தை நமக்கு ஆப் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த குடை இரண்டு வகைகளில் கிடைக்கின்றன.

3.1 அடி உயரம் கொண்ட வளைந்த கைப்பிடி கொண்ட குடை க்ளாஸிக்.

0.8 அடி உயரம் கொண்ட நேரான கைப்பிடி கொண்ட குடை மொடர்ன்.

இந்தக் குடையைச் ’சிறிய வானிலை மையம்’ என்கிறார்கள்.

குடையில் இருக்கும் சென்சார்கள் நேரம், வெளிச்சம், ஈரப்பதம், அழுத்தம், வெப்பநிலை போன்றவற்றைப் பதிவு செய்து, அடுத்து அரை மணி நேரத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுகிறது.

‘வானிலைக்கு ஏற்ப இந்தக் குடையின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் ஊம்ப்ரெல்லாவின் தனிச் சிறப்பு’’ என்று வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments