Polystyrene உற்பத்திகளை தடைசெய்கிறது சான் பிரான்சிஸ்கோ

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
Polystyrene உற்பத்திகளை தடைசெய்கிறது சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ ஆனது வரும் 2017 ஆம் ஆண்டளவில் எல்லா வகையான Polystyrene (styrofoam) உற்பத்திகளையும் தடைசெய்யவிருப்பதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.

Polystyrene அனது பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்திகளாகும்.

இவை தேநீர் கோப்பைகள், கடலை பைகள் மற்றும் பல வகையான பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வகை பொருட்கள் 2017 தை 1ம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளது.

அதோடு 2017 ஆடி 1ம் திகதி முதல் மீன் மற்றும் இறைச்சி பொருட்களை பாதுகாக்க Polystyrene இனை பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக்கப்படவிருக்கிறது.

இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ 2020 ஆம் ஆண்டளவில் மாசற்ற நகரமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கையே இது என சொல்லப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டளவில் கொள்கலன்களை கொண்டுசெல்ல Polystyrene இனை பயன்படுத்துவதை சான் பிரான்சிஸ்கோ தடைசெய்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் கிட்டத்தட்ட வருடாவருடம் 25 பில்லியன் Polystyrene கோப்பைகள் சூழலில் வீசப்படுகின்றன.

இவ்வகை பொருட்கள் மென்மையானவையாயினும் அவை இலகுவில் பிரிக்கப்பட முடியாதவையாகும்.

இவ்வகை பொருட்கள் கொண்டுள்ள இரசாயனங்கள் நீரை மாசாக்குகின்றன.

அதோடு இவற்றிலுள்ள ஓமோன் எதிர்ப்பு இரசாயனங்கள் மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.

இவ் விளைவுகளை கருத்தில் கொண்டே சான் பிரான்சிஸ்கோ இப்பொருட்களுக்கு தடை விதிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments