சாம்சங் நிறுவனத்தில் பாரிய வீழ்ச்சி! இரண்டாக உடைபடுமா?

Report Print Fathima Fathima in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்துடனான காப்புரிமை வழக்கு, சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்தது உட்பட பல சிக்கல்கள் எழுந்துள்ளதால் விற்பனையில் பாரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர ஏராளமான அம்சங்களுடன் விலை குறைவாகவும் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

இதனாலும் சாம்சங் விற்பனையில் சரிவு ஏற்பட்டது, அதுமட்டுமின்றி கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியதும், அதனை திரும்ப பெற்றதும், உற்பத்தியை நிறுத்தியதும் பாரிய அடியாக உள்ளது.

கடந்த 6 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்கு சுமார் 8.04 சதவீதம் வரை சரிந்து வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சரிவிற்கு பின் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கச் சாம்சங் நிறுவனம் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஏலாய்ட் மேனேஜ்மென்சட் நிறுவனத்தின் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

இத்திட்டத்தின் படி சாம்சங் ஹோல்டிங் நிறுவனம் உரிமை நிறுவனம், செயல்பாட்டு நிறுவனம் என இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது எனச் சியோல் எக்னாமிக் டெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments