உங்கள் ரகசிய கோப்புகளை லாக் செய்வது எப்படி?

Report Print Meenakshi in ஏனைய தொழிநுட்பம்

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் திருடு போகாமல் அதனை பாதுகாப்பதற்கு சில Software-களை நாம் உபயோகிப்போம்.

எந்த Software-ம் பயன்படுத்தாமல் ஒரு பைலினை நம்மால் பூட்டி(Lock) வைக்க இயலும். இந்த முறையினை விண்டோஸ் இயங்குதளத்தினை கொண்ட அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த இயலும்.

செயல்படுத்தும் முறை
  • முதலில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் எந்த பைலினை பாதுகாக்கவேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.
  • அதனை Right click--> Add to Archive என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

  • இதில் Archive Format என்பதில் ZIP என்பதை தெரிவு செய்தவுடன், Advanced Option-யை கிளிக் செய்யவும்.
  • இதில் Set Password என்பதை தெரிவு செய்து உங்களுடைய கடவுச்சொல்லை Enter செய்யவும், பின்னர் OK கொடுத்து வெளியேரவும்.

  • இப்போது மற்றொரு Zip பைலானது உருவாகிவிடும். பின்னர் முதலில் உருவாக்கிய பைலினை(Original File) அழித்துவிடவேண்டும்.

  • புதிதாக உருவாக்கப்பட்ட Zip பைலை ஓபன் செய்து, பைலினை தெரிவு செய்தால் Password கேட்கும்.
  • தவறான Password கொடுக்கப்படும் பட்சத்தில் Error Message காட்டப்படும், தற்போது இந்த பைலினை மற்றவர்களால் Password இல்லாமல் பார்க்க முடியாது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments