தண்ணீரை இனி கடித்து சாப்பிடலாமே!

Report Print Meenakshi in ஏனைய தொழிநுட்பம்
157Shares
157Shares
lankasrimarket.com

உலகம் முழுதும் பிளாஸ்ரிக்கின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 50 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாட்டில்களை தயாரிக்கு 17மில்லியன் பேரல் எண்ணெய் பயன்படுகிறது.

இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவில் சுற்றுச்சூழலுக்கு மாசினை உண்டாக்குகிறது.

நாம் தண்ணீர் குடித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களும் பாக்கெட்டுகளும் மட்காமல் நிலத்தினை அழிக்கிறது.

இதற்கு தீர்வாக லண்டனை சேர்ந்த ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப்ஸ் (Skipping rocks lab) என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஓகோ(Ooho) என்னும் தண்ணீர் பந்துகளை தயாரித்து வருகின்றது.

வாட்டர் பாட்டிலின் பயன்பாட்டை குறைப்பதற்காக எங்கு எல்லாம் பாட்டில்களின் தேவை அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் இந்த நிறுவனம் தண்ணீர் பந்துக்களை தயார் செய்யும் இயந்திரங்களை கொண்டு சென்று சுத்தமான நீரை வழங்கி வருகிறது.

பார்ப்பதற்கு பந்து போன்ற அமைப்பில் இருக்கும் இதனுள் நீர் இருக்கும். தற்போது 50 முதல் 150மிலி வரையிலான பந்துக்கள் மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பந்துக்களில் உள்ள நீரை குடித்துவிட்டு இதனை அப்படியே சாப்பிட்டு விடலாம். இதனை கீழே போட்டாலும் 4 வாரங்களுக்குள் மட்கிவிடும் தன்மையுடையது.

100 சதவீதம் தாவரங்கள் மற்றும் கடற்பாசிகளில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கப்பயன்படும் செலவினை விட இதில் மிக குறைந்தளவே ஆகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments