பாலியல் வீடியோக்களை முடக்கக்கோரி வழக்கு: ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Report Print Meenakshi in ஏனைய தொழிநுட்பம்

பாலியல் வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதை தவிர்ப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் வாட்ஸ் அப் நிறுவனத்தையும் பிரதிவாதியாக சேர்த்துக்கொள்வதற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த ‘பிரஜ்வாலா’ என்ற தொண்டு நிறுவனம், பென்டிரைவில் பதிவு செய்யப்பட்ட 2 கற்பழிப்பு வீடியோக்களுடன் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாகவும், இத்தகைய வீடியோக்கள் வெளியாவதை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அதை ஒரு வழக்காக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை கண்டறிய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

மேலும், பாலியல் குற்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை தடுப்பதற்கு தொழில்நுட்பரீதியாக தீர்வு காண்பதற்காக, மத்திய அரசு மற்றும் இணையதள நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்தது.

இந்நிலையில், நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரான ‘பிரஜ்வாலா’ சார்பில் ஆஜரான வக்கீல் அபர்ணா பட், இவ்வழக்கில் ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்தையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதை ஏற்று, வாட்ஸ்அப்பை பிரதிவாதியாக சேர்த்துக் கொண்ட நீதிபதிகள், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், தாங்கள் அமைத்த குழுவுக்கு அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி மூலமாக கூட ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் யோசனை தெரிவிக்கலாம் என்றும் கூறினர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments