இயேசு நாதருடைய பரம்பரை அலகினை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
340Shares
340Shares
ibctamil.com

உலகின் பல பாகங்களிலும் இருந்து கண்டெடுக்கப்படும் படிமங்களைக் கொண்டு விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியிருக்கையில் சுாமார் 2,000 ஆண்டுகள் பழமை வய்ந்ததாகக் கருதப்படும் எலும்பு சுவடுகளில் இருந்து இயேசுநாதருடைய பரம்பரை அலகினை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பல்கேரியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளைக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வானது இவ் வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் 2010ம் ஆண்டளவில் Kasimir Popkonstantinov எனும் விஞ்ஞானி எலும்பு ஒன்றினைக் கண்டுபிடித்திருந்தார்.

இந்த எலும்பானது ஜோன் பெப்டிஸ்ட் எனும் ஞானியினுடையது என நம்மப்பட்டு வருகின்றது.

எனினும் இதுவரையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே இயேசுநாதருடைய பரம்பரை அலகினை கண்டறியும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments