ஒலி எழுப்பாத டர்பைன்கள் மற்றும் விமானங்களை வடிவமைக்க உதவும் ஆந்தைகள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
208Shares
208Shares
lankasrimarket.com

இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிரினங்களினதும் செயற்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது.

இந்த இயற்கையின் விந்தைகளைப் பார்த்தே பல்வேறு செயற்கை புரட்சிகளை மனிதன் ஏற்படுத்தினான்.

இவற்றுள் பறவைகளை மாதிரியாகக் கொண்டு விமானங்கள் உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் பறவைகளுள் ஆந்தைகள் சற்று வித்தியாசமான இயல்பினைக் கொண்டதாக இருக்கின்றன.

அதாவது இவை பறக்கும் போது இறக்கைகள் ஒலி எழுப்புவதில்லை.

எனவே இந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டு டர்பைன்கள் மற்றும் ஆகாய விமானம் என்பவற்றினை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

ஜப்பானிலுள்ள Chiba பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த குழுவே இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments