புதிதாக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மாத்திரைக்கு அனுமதி வழங்கியது FDA

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
54Shares
54Shares
ibctamil.com

உடலின் உள்ள மாற்றங்கள் மற்றும் நோய்களை கண்டறிவதற்காக டிஜிட்டல் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்துவதற்கு உணவு மற்றும் மாத்திரைகளுக்கான நிர்வாகம் (FDA) அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் குறித்த மாத்திரையானது மருத்து உலகில் புதிய யுகத்தினை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இம் மருத்துவ முறையானது Abilify MyCite என அழைக்கப்படுகின்றது.

இதனை உள்ளெடுத்ததும் வயிற்றிலுள்ள அமிலமானது மாத்திரையிலுள்ள சென்சாரினை செயற்படுத்துகின்றது.

அதன் பின்னர் மாத்திரையிலிருந்து இலத்திரனியல் சமிக்ஞை பிறப்பிக்கப்படும்.

இதனை நோயாளியின் மார்பு பகுதியில் இணைக்கப்பட்டுள்ள பேச் (Patch) ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும்.

குறித்த சமிக்ஞையை ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனின் உதவியுடன் பகுப்பாய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்