பில்கேட்ஸ் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம்: செலவு எத்தனை கோடிகள் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
475Shares
475Shares
ibctamil.com

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுனரும் முன்னாள் தலைமை அதிகாரியுமான பில்கேட்ஸ் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இதன் ஒரு அங்கமாக ஸ்மார்ட் நகரம் ஒன்றினை அரிசோனா பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக சுமார் 80 மில்லியன் டொலர்கள் செலவு செய்ய திட்மிட்டுள்ளார், அதாவது சுமார் 1,200 கோடிகள் ஆகும்.

மொத்தமாக 25,000 ஏக்கர் பரப்பளவில் இந்த நகரம் உருவாக்கப்படவுள்ளது.

இதில் 3.400 ஏக்கர்கள் திறந்த வெளியாகவும், 470 ஏக்கர்களில் பாடசாலையும் அமையவுள்ளதுடன் 3,800 ஏக்கர்களில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைத் தொகுதிகள் என்பனவும் அடங்கவுள்ளது, எஞ்சிய பகுதியில் சுமார் 80,000 வீடுகளும் கட்டப்படவுள்ளன.

எனினும் இந்த நகரம் உருவாக்குவதற்கான கால வரையறைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்