பயனர்களின் தகவல்களை திரட்டுவதற்காக அன்ரோயிட் இயங்குதளத்தினை அறிமுகம் செய்ததா கூகுள்?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
40Shares
40Shares
ibctamil.com

இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனம் வேறு பல சேவைகளையும் வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

இவற்றுள் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் இயங்குதளத்தினை வடிவமைத்து வழங்கி வருகின்றமையும் ஒன்றாகும்.

இவ் இயங்குதளமானது உலகில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் ஊடாக அதனை பயன்படுத்துபவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பயனர்கள் இருக்கும் இடங்கள் உட்பட பல்வேறு தகவல்கள் இவ்வாறு திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அனைத்து அன்ரோயிட் கைப்பேசிகளிலும் Location எனும் சேவை தரப்பட்டுள்ளது.

பயனர்கள் தமது தேவைக்காக இவ் வசதியினை செயற்படுத்தும்போது அவர்களின் இருப்பிடம் தெடர்பான தகவலை கூகுள் பெற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பயனர்களின் இருப்பிடங்கள் தொலைபேசி கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டு அன்ரோயிட் கைப்பேசிகள் கூகுளிற்கு அனுப்பி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்