அதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!

Report Print Gokulan Gokulan in ஏனைய தொழிநுட்பம்
236Shares
236Shares
ibctamil.com

அதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் வருவதற்கு 400 சதவிகிதத்துக்குமேல் வாய்ப்பிருப்பதாக மும்பை ஐஐடி பேராசிரியர் கிரிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர், செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது.

இந்த தொழில்நுட்பம் நமக்கு மறைமுக ஆபத்தை விளைவிக்க கூடியது, ஒரு நாளைக்கு 30 நிமிடத்துக்கு மேல் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

இளைஞர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம், அவர்களின் மூளை கபாலம் மிகவும் மென்மையானதாக உள்ளதால் செல்போன் கதிர்வீச்சு உடனடியாக அவர்களின் மூளையை பாதிக்கும்.

தொடர்ச்சியாக செல்போன் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கு 400 சதவிகிதத்துக்கு மேல் வாய்ப்புள்ளதாகவும், டி.என்.ஏ.விலும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு மண்டலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், மனிதர்கள் மட்டுமின்றி செல்போன் கதிர்வீச்சால் விலங்குகள் மற்றும் தாவரங்களும் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பேராபத்து குறித்து இந்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ள கிரிஷ்குமார், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை தவிர்க்கமுடியாததால், சரியான முறையில் பக்கவிளைவுகள் ஏற்படாமல் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்