கூகுளிற்கு நேர்ந்த வினோத அனுபவம்: மாற்றத்தினை செய்து சமாளித்தது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைய ஜாம்பவான் ஆன கூகுளில் இருந்தே அனைத்து வகையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கூகுளிற்கு தெரியாத தகவல்கள் எதுமே இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமே.

இவ்வாறிருக்கையில் அந் நிறுவனத்திற்கு வினோத அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது இவ் வருடம் தனது இயங்குதளத்தின் Andriod 8.0 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இதில் தனது சொந்த வடிவமைப்பிலான ஈமோஜிக்களையும் (Emoji) அறிமுகம் செய்திருந்தது.

இவற்றில் பர்கர் உணவுப் பொருளின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட ஈமோஜியில் குறைபாடு இருப்பது பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பர்கரில் சீஸ் வைக்கப்படும் இடம் தவறாக காட்டப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் அறிமுகம் செய்த Android 8.1 பதிப்பில் இக் குறைபாட்டினை சரிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்