ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களை வழங்கும் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவத்தின் பங்காளி நிறுவனமாகவே உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் விளங்கி வருகின்றது.

இத் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு பல்வேறு வரையறைகள் காணப்படுகின்றன.

எனினும் பயனர்களில் அதிகளவானவர்கள் குறித்த வரையறைகளை மீறிவருகின்றனர்.

அதேபோன்று தீவிரவாதம் தொடர்பிலான வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றினைக் கண்காணித்து யூடியூப் தளத்தினை மேம்படுத்துவதற்கு புதிதாக பணியாளர்களை அமர்த்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 2018ம் ஆண்டில் சுமார் 10,000 வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்