விரைவில் வெளியாகும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன்

Report Print Samaran Samaran in ஏனைய தொழிநுட்பம்

சீனாவில் விவோ X20 மற்றும் X20 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வழங்கிய விவோ நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.

2017-ம் ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்பிளே6 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

3C சான்றளிக்கும் தளத்தில் BK1124 என்ற குறியீட்டு பெயரில் காணப்பட்ட ஸ்மார்ட்போன் விவோ X20 பிளஸ் UD என்ற பெயரில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பெயருக்கு ஏற்றார்போல UD என்பது அன்டர் டிஸ்ப்ளேவை குறிக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவோ X20 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற கேமரா மற்றும் வன்பொருள் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ X20 மற்றும் X20 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இதன் டூயல் கேமரா அமைப்பு 12 எம்பி, f/1.8 மற்றும் 5 எம்பி கேமரா, 12 எம்பி டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் வழங்கப்பட்டிருக்கிறது.

விவோ X20 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.30,000 மற்றும் பெரிய X20 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.35,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் விவோ சார்பில் உறுதி செய்யப்படாத நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்