புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் செய்ய வருகிறது மினி பிரிண்டர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
104Shares
104Shares
ibctamil.com

ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் எடுக்கப்படும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் செய்துகொள்வதற்கு மினி பிரிண்டர் ஒன்றினை கொடாக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Kodak 2 எனும் இப் பிரிண்டரினை ப்ளூடூத் அல்லது NFC தொழில்நுட்பத்தினால் கைப்பேசிகளுடன் இணைக்க முடியும்.

மேலும் இப் பிரிண்டரை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

கலர் மற்றும் கறுப்பு வெள்ளை புகைப்படங்களை 2.1”x3.4” எனும் அளவில் பிரிண்ட் செய்துகொள்ள முடியும்.

இதனை 99.99 டொலர்கள் பெறுமதியில் அமேஷான் தளத்திலிருந்து கொள்வனவு செய்துகொள்ளலாம்.

இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் என்பவற்றிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்