புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயும் வாட்ஸ் ஆப்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
36Shares
36Shares
ibctamil.com

சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது மெசஞ்சர் செயலிகளும் இன்று அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதுபோன்று இவற்றினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அசம்பாவிதங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதனால் பாதுகாப்பினை அதிகரிக்கும்பொருட்டு புதிய அம்சங்கள் குறித்த செயலிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் ஸ்பார்ம் குறுஞ்செய்திகளை ப்ளாக் செய்வதற்கான வசதியினை வாட்ஸ் ஆப் செயலியில் தருவது குறித்து அந்நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.

இவ்வாறான செய்திகளை பயனர்கள் தாமே ப்ளாக் செய்துகொள்ள முடியும்.

ஒரு செய்தியினை 25 தடவைகளுக்கு மேல் பரிமாற்றம் செய்தால் அது ஸ்பார்ம் ஆக கருதப்படும், அதன் பின்னர் அச் செய்தி ஸ்பார்ம் ஆக கருதப்படும்.

இதன்போது குறித்த செய்தியை பரிமாறும் நபரின் கணக்கும் முடக்கப்படும் சாத்தியம் உண்டு.

அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்காக வெளியிடப்படவுள்ள அடுத்த வாட்ஸ் ஆப் பதிப்பில் இவ் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்