புதிய வசதியினை பயனர்களுக்கு அளிப்பது தொடர்பில் பரீட்சிக்கும் இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
19Shares
19Shares
ibctamil.com

புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் முன்னணி வலையமைப்பாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இத் தளத்தில் காலப்போக்கியில் குறுகிய நீளமுடைய வீடியோக் கோப்புக்களையும் பகிர்ந்துகொள்ளும் வசதி தரப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் மட்டுமன்றி எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகளையும் அனுப்பக்கூடிய வசதியை பயனர்களுக்கு அளிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Type என அழைக்கப்படும் இப் புதிய வசதி தொடர்பிலான பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இவ் வசதி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவற்றிற்கு பாரிய போட்டியாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்