ஸ்மார்ட் கைபேசி மின்கலத்தை கடித்த நபர்: வெடித்து சிதறிய மின்கலம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
75Shares
75Shares
ibctamil.com

கடந்த காலங்களில் ஸ்மார்ட் கைபேசிகளின் மின்கலங்கள் வெடிப்பு தொடர்பாக பல செய்திகள் வெளியாகியிருந்தன.

இம் மின்கலங்களின் பாவனை அதிகமாக இருப்பதனால் வெப்பமடைவதும் அதிகமாக இருக்கின்றமையே இவ் அனர்த்தத்திற்கு காரணமாகும்.

இப்படியிருக்கையில் நபர் ஒருவர் ஸ்மார்ட் கைபேசியின் மின்கலத்தினை வாயால் கடித்த வேளை அம் மின்கலம் வெடித்துள்ளது.

இச் சம்பவம் சீனாவில் உள்ள இலத்திரனியல் சாதன விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இக் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை சீனாவில் இருந்து இயங்கும் Miaopai எனும் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வீடியோ இதுவரை 4.69 மில்லியனிற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்