பேஸ்புக் செயலிழந்துவிட்டது! கோபத்தில் பயன்பாட்டாளர்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
97Shares
97Shares
ibctamil.com

சமூகவலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் கடந்த இரண்டு நாட்களாக செயலிழந்து சரியாக வேலை செய்யவில்லை என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று சில நேரங்கள் மட்டும் செயலிழந்து காணப்பட்டதாகவும், இதே பிரச்னை இன்று 1 மணியளவிலும் நிகழ்ந்துள்ளது.

இதனால், பேஸ்புக் பயன்பாட்டார்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி, தங்கள் கோபத்தை டுவிட்டர் பக்கத்தில், facebook Down என்று ஹேஸ்டேக் செய்துள்ளனர்.

மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பலரும் பல மணி நேரங்களுக்கு பேஸ்புக் தளத்தில் நுழைய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மட்டுமின்றி பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் சில மணி நேரங்களுக்கு பேஸ்புக் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்