பொஸ்டன் நிறுவனம் உருவாக்கிய வினோத ரோபோ

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அதி நவீன ரோபோக்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற பொஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றுமொரு வினோத ரோபோவினை வடிவமைத்துள்ளது.

இந்த ரோபோ தானாகவே கதவுகளை திறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலங்கு வடிவங்களில் இந்நிறுவனம் ரோபோக்களை அறிமுகம் செய்து வருகின்றது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ரோபோ முதன் முறையாக 2016ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருந்தது.

எனினும் 2017ம் ஆண்டில் குறித்த ரோபோவினை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையிலேயே கதவுகளை திறப்பதுடன் அவற்றினை மீண்டும் மூடாதவாறு பிடித்து வைத்திருக்கக்கூடிய இயல்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த ரோபோவின் செயற்பாட்டினை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்