ரெட் வைனின் மற்றுமொரு மருத்து பயன்பாடு தொடர்பில் புதிய தகவல் வெளியானது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
211Shares
211Shares
lankasrimarket.com

ரெட் வைன் அருந்துவதனால் இருதயம் தொடர்பான நோய்கள் இலகுவில் ஏற்படாது எனவும், நீரிழிவு நோய் தாக்குவதற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் எனவும் ஏற்கணவே ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு மருத்துவ பயன்பாடு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அதாவது பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் என்பனவற்றிலிருந்து பாதுகாப்பினை தரும் என கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் வைனில் காணப்படும் பொலிபீனோல்ஸ் எனப்படும் சேர்வை மேற்கண்ட நோய்களை விளைவிக்கும் பக்டீரியாக்களை அழிக்க வல்லது என ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் ரெட் வைன் அருந்துவதை ஊக்குவிக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்திருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்