பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு உதவும் நவீன ஸ்மார்ட் கிளாஸ் தயார்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
38Shares
38Shares
lankasrimarket.com

ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று அதி நவீன ஸ்மார்ட் கிளாஸினை வடிவமைத்துள்ளது.

இக் கிளாஸ் ஆனது பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு உதவக்கூடியதாக உள்ளது.

அதாவது சொற்களை ஒலி வடிவில் மாற்றித் தரக்கூடியதாக உள்ளது.

ஸ்மார்ட் கிளாஸ் தயாரிப்பானது 2012ம் ஆண்டிலிருந்து பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் முதன் முறையாக சொற்களை ஒலி வடிவிற்கு மாற்றும் ஸ்மார்ட் கிளாஸினை ஜப்பான் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

47 டொலர்கள் பெறுமதியான இக் கிளாஸ் தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்