மனித விந்தில் புதிய கட்டமைப்பை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
481Shares
481Shares
lankasrimarket.com

மனிதர்களின் விந்தில் தலைப் பகுதியும், வால் பகுதியும் இருப்பது ஏற்கணவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதில் காணப்படும் வால் பகுதியானது விந்தணுக்கள் நீந்துவதற்கு உரிய ஆற்றலை வழங்குகின்றன.

எனினும் இவ் வால் பகுதியின் அடிப்பகுதியில் மேலும் ஒரு கட்டமைப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுருள் வடிவில் இருக்கும் இப் பகுதியை ஸ்வீடனில் உள்ள Gothenburg பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் Colorado பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

Cryogenic Electron Tomography எனப்படும் தொழில்நுட்பத்தின் ஊடாகவே இப் புதிய கட்டமைப்பினைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்