கமெரா தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியது கனோன்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
117Shares
117Shares
lankasrimarket.com

புகைப்படக் கமெராக்களை வடிவமைப்பதில் பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக கனோன் நிறுவனம் காணப்படுகின்றது.

இந்நிறுவனம் கமெராவில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்தியுள்ளது.

இதன்படி கமெராவில் பொருத்தப்பட்டுள்ள Flash ஆனது சிறந்த கோணத்தினை நோக்கி தானாக திரும்பும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

470EX-AI எனும் தான் உருவாக்கிய புத்தம் புதிய கமெராவிலேயே இந்த அதிரடி தொழில்நுட்பத்தினை கனோன் புகுத்தியுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் ஆனது புகைப்படம் எடுக்க வேண்டிய தூரம், நோக்கம் என்பவற்றினை துல்லியமாக கணிக்கின்றது.

அதன் பின்னர் தானாகவே Flash இனை சரிசெய்கின்றது.

இதன் மூலம் நேரச் சிரமம் இன்றி அழகிய புகைப்படங்களை விரைவாக எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்