உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த டட்டூ கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
73Shares
73Shares
lankasrimarket.com

தற்காலத்தில் உடலில் டட்டூ எனப்படும் பச்சை குத்திக்கொள்வது பேஷனாக மாறியுள்ளது.

இவ்வாறு பச்சை குத்துவதால் நன்மை உண்டு என விவாதிக்கப்பட்ட போதிலும் பல்வேறு நோய்களை ஏற்படுத்த வல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பச்சை குத்தும் பழக்கம் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள மம்மிக்களின் உடலில் பச்சை குத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மம்மிக்கள் சுமார் 5,000 வருடங்களுக்கு முற்பட்டவையாகும்.

இதனை வைத்து பார்க்கும்போது 5,000 வருடங்களுக்கு முன்னர் இருந்தே பச்சை குத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்