தானியங்கி கார் பரிசோதனையில் பறிபோனது பெண்ணின் உயிர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் உட்பட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தானியங்கி கார் வடிவமைப்பில் முனைப்புக் காட்டி வந்தன.

இந்நிலையில் ஒன்லைன் ஊடாக வாகன சேவையை வழங்கி வரும் ஊபர் (Uber) நிறுவனமும் தானியங்கி காரினை வடிவமைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

இதன்போது குறித்த கார் பெண் ஒருவருடன் மோதியுள்ளது.

பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அப் பெண் உயிரிழந்துள்ளார்.

போனிக்ஸ் மாநிலத்தின் டெம்பே பகுதியில் முதன் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்