அடுத்த 24 மணி நேரத்தில் பூமியின் மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் : பூமியில் எந்த நாட்டின் மீது விழும் தெரியுமா?

Report Print Athavan in ஏனைய தொழிநுட்பம்

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்கோங்-1 நாளை காலை பூமியின் மீது விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எடை 9.5 டன் ஆகும். 2011 இறுதியில் சீனாவின் விண்வெளித் துறை தனது டியாங்கோங்-1 என்ற ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது.

ஆனால் இது பாதியில் செயலிழந்து, தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரமாக இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் எப்போது பூமியை தாக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தற்போது இதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரீன்விச் நேரப்படி திங்களன்று நள்ளிரவு 12.25 மணிக்கு தியன்கொங்-1 பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழையும் என்று ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

அந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் மண்ணை அடையும் முன்னரே வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து சிதைந்து விடும் என்றும், சிதைவுகள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சிதைவுகளும், நியூசிலாந்து, அமெரிக்காவுக்கு இடையிலான கடற்பரப்பிலேயே விழும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல அந்த விண்வெளி நிலையம் அதிகமான விசையுடன் பூமியில் நுழையாது என்றும், விண் கற்களின் வண்ணமிகு தூரல் போலவே அது வளி மண்டலத்துக்குள் நுழையும் என்றும் சீன விஞ்ஞானிகள் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers