அஸ்தமனத்தை நோக்கி நகர்கின்றதா பேஸ்புக்? இதோ அடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
228Shares
228Shares
lankasrimarket.com

பேஸ்புக் நிறுவனத்தின் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் பயனர்களை தக்க வைத்துக்கொள்ள பேஸ்புக் நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக தற்போது பேஸ்புக்கினை பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய அப்பிளிக்கேஷன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் கணக்குகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அப்பிளிக்கேஷன்கள் பிரபல்யம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

இந்த அப்பிளிக்கேஷன்கள் ஒருவரது கணக்கிலிருந்து மின்னஞ்சல் முகவரி உட்பட அவரது புகைப்படங்களை உள்வாங்கிக்கொள்ளும்.

இதன் அடிப்படையில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியிடப்படும்.

உதாரணமாக எந்த நடிகர் அல்லது நடிகையைப் போன்று நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை இவ்வாறான அப்பிளிக்கேஷன்கள் ஊடாக தெரிந்துகொள்ள முடியும்.

இதன்போது உங்கள் புரொபைல் படத்தினை குறித்த அப்பிளிக்கேஷன் உள்வாங்கிக்கொள்ளும்.

இவ்வாறான செயற்பாடுகளினால் தனிநபர் தகவல்கள் கசிகின்றன.

எனவே இந்த அதிரடி நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்